தனியார் பள்ளி ஆசிரியர்களை பொதுத் தேர்வுகளில் பயன்படுத்த கூடாது - பள்ளிக் கல்வித்துறை

 தனியார் பள்ளி ஆசிரியர்களை பொதுத் தேர்வுகளில் பயன்படுத்த கூடாது - பள்ளிக் கல்வித்துறை

10, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு வரும் மார்ச் மாதம் 2ம் தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 12ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்தநிலையில்  கடந்த காலங்களில் தமிழகத்தில் இருக்கக்கூடிய சில பள்ளிகளில், பொதுத்தேர்வு நடைபெறும் சமயங்களில் சில தவறுகள் நடந்தது தேர்வுத்துறையின் கவனத்துக்கு வந்தது.

இதனை தொடர்ந்து தனியார் பள்ளிகளில் மையங்கள் அமைக்கப்படுகின்ற போது அங்கு பணியாற்றக்கூடிய ஆசிரியர்களே தேர்வு மையங்களில், தேர்வு பணிகளில் ஈடுபடுகின்றார்கள். 

அவ்வாறு அவர்கள் ஈடுபடும் போது சில தவறுகள் நடைபெறுவதாக தேர்வுத்துறையின் கவனத்திற்கு வந்ததை அடுத்து,  10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் தனியார் பள்ளி ஆசிரியர்களை பயன்படுத்த கூடாது என்று பள்ளிக் கல்வி தேர்வுத் துறை அறிவித்துள்ளது. 

மேலும் அடையாள அட்டை இல்லாதவர்களை அனுமதிக்க கூடாது எனவும் அறிவுரை வழங்கி உள்ளது.