மேல் படிப்புக்காக அமெரிக்கா பறக்கும் இந்திய மாணவர்கள்

மேல் படிப்புக்காக அமெரிக்கா பறக்கும் இந்திய மாணவர்கள்

பெங்களூரு : மேற்படிப்பிற்காக, அமெரிக்கா செல்லும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை நடப்பு ஆண்டில் 21 ஆயிரம் (12 சதவீதம்) அதிகரித்து 1,86,000 என்ற அளவில் உள்ளது. தொடர்ந்து நான்காவது முறையாக, இரட்டை இலக்கத்தில் வளர்ச்சி அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.இந்தியாவில் இருந்து அமெரிக்காவில் படிக்கும் மாணவ-மாணவிகளில் அதிகம் பேர் இளநிலை பட்டபடிப்பு படிப்பவர்கள்தான். 2016-2017 கல்வி ஆண்டில் இளநிலை பட்டப்படிப்பு படிக்கும் மாணவ-மாணவிகள் 56.3 சதவீதம். பட்டப்படிப்பு முடித்து விட்டு முதுநிலை பட்டம் உள்ளிட்ட இதர படிப்பு படிப்பவர்கள் 1.2 சதவீதம் ஆகும். 

மேற்படிப்பிற்காக, அமெரிக்கா செல்லும் சர்வதேச நாடுகளின் மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில், சீனா முதலிடத்திலும், இந்தியா இரண்டாவது இடத்திலும் உள்ளது.அமெரிக்க பல்கலைக்கழகங்களில் தரமான கல்வி அளிப்பதால் வருடந்தோறும் உலக நாடுகளில் இருந்து மாணவ-மாணவிகள் குவிந்தவண்ணம் உள்ளனர்.