பள்ளி தொடங்கும்முன் மாணவர்களுக்கு 15 நிமிடம் உடற்பயிற்சி - செங்கோட்டையன்

பள்ளி தொடங்கும்முன் மாணவர்களுக்கு 15 நிமிடம் உடற்பயிற்சி - செங்கோட்டையன்

   
பள்ளி தொடங்கும் முன் மாணவர்களுக்கு 15 நிமிடம் உடற்பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.


பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் டுவிட்டரில் இன்று வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது: 

தமிழக அரசின் சார்பில், பள்ளி துவங்குவதற்கு முன்பு மாணவர்களுக்கு 15 நிமிடங்கள் உடற்பயிற்சி (Physical Exercise) தருவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதற்கான சுற்றறிக்கை உடனடியாக வழங்கப்படும் என பதிவிட்டுள்ளார்.