5,8 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு

5,8 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு


   
5,8 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை இன்று வெளியிட்டுள்ளது.5-ம் வகுப்பு மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்த மத்திய அரசு முடிவு செய்தது. மேலும் மத்திய அரசின் முடிவை மசோதாவாகவும் தாக்கல் செய்தனர். இந்த நடைமுறையை அந்தந்த மாநிலங்களே முடிவு செய்து கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்தது.

மத்திய அரசின் முடிவின்படி, தமிழகத்தில் 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது. இந்த தேர்வுகள் நடப்பு கல்வி ஆண்டு முதல் நடைமுறைக்கு வரும் எனவும் அறிவிக்கப்பட்டது.இந்நிலையில், 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை இன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, 5-ம் வகுப்புக்கான தேர்வு 2020 ஏப்ரல் 14-ம் தேதி தொடங்கி ஏபரல் 20-ம் தேதி வரை நடைபெறுகிறது.

அதேபோல், 8-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு 2020 மார்ச் 30-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 17-ம் தேதியுடன் நிறைவடைகிறது. 8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை: மார்ச் 30 - தமிழ், ஏப்ரல் 2 - ஆங்கிலம், ஏப்ரல் 8 - கணிதம், ஏப்ரல் 15 - அறிவியல், ஏப்ரல் 17 - சமூக அறிவியல்.