சிபிஎஸ்இ பதிலளிக்க ஹைகோர்ட் கிளை உத்தரவு

சிபிஎஸ்இ பதிலளிக்க ஹைகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: நீட் தமிழ் மொழி வினாத்தாள் குளறுபடி தொடர்பாக பதிலளிக்க சிபிஎஸ்இக்கு உயர்நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது.

நாடு முழுவதும் மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு கடந்த மே மாதம் 6 ஆம் தேதி நடைபெற்றது. நீட் தேர்வை, 13 லட்சம் மாணவ மாணவியர் எழுதினர்.

நீட் தேர்வில் தமிழில் மொழி பெயர்த்ததில் 49 கேள்விகளில் பிழை என டி.கே.ரங்கராஜன் எம்.பி வழக்கு தொடர்ந்துள்ளார்.இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீட் தமிழ் வழி தேர்வில் பிழைகள் இருப்பதாக தொடரப்பட்ட வழக்கில் சிபிஎஸ்இ பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
மேலும் நீட் தமிழ் மொழி வினாத்தாளில் உள்ள பிழைகளுக்கு கருணை மதிப்பெண் கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்கவும் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.