உங்கள் வேலைவாய்ப்பை அதிகப்படுத்துவதற்கான திறன்கள்...!

உங்கள் வேலைவாய்ப்பை அதிகப்படுத்துவதற்கான திறன்கள்...!

வேலைவாய்ப்பு திறன்

எழுத்தாளர்: வினோத் குமார் சங்கரன்

Gyanamite, தமிழில் திறமை மற்றும் வேலைவாய்ப்பை வளர்க்க நிறைய வீடியோக்கள் மற்றும் வலைப்பதிவுகளைகொண்ட தளம்.நம் நாட்டில் உள்ள
மாணவர்களையும் இளைஞர்களையும்,அவர்களுக்குத் தொடர்புடைய வேலைவாய்ப்பு திறன்களை வளர்க்கும் நோக்கில் உதவுகிறது.
gyanamite.com இல் தொழில் வல்லுநர்களிடமிருந்து கற்றுக் கொண்டு உங்கள் வாழ்க்கையில் வெற்றிகரமான பயணத்தைத் தொடங்குங்கள்.

நல்ல தொழில்நுட்ப அறிவு மற்றும் பொருள் அறிவுடன், நிறுவனங்கள் ஒரு ஊழியரிடமிருந்து அவர்கள் விரும்பும் திறன்களைத் தொகுப்பார்கள். இத்திறன்கள், பணியாளரின் சிறந்த பாத்திரத்தைத் தக்கவைப்பதை அவர்கள் நம்புகிறார்கள். உங்கள் அறிவு, திறமைகள் மற்றும் மனோபாவங்கள் ஆகியவற்றைப் பொறுத்து, நீங்கள் அதை எப்படிப் பயன்படுத்துகிறீர்கள், மற்றும் எப்படி நிறுவனங்களுக்கு வெளிப்படுத்துகிறீர்கள் என்பதைப் பொறுத்து உங்கள் வேலைக்கான வாய்ப்பு அதிகரிக்கும். நிறுவனங்கள் ஊழியர்களிடமிருந்து எதிர்பார்க்கும் முக்கியமான சில வேலைவாய்ப்பு திறன்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன. 

தொடர்பாடல் மற்றும் தனிப்பட்டவர்கள் திறன்கள் (Communication and interpersonal skills) 

நீங்கள் விளக்க நினைப்பதை, தெளிவாக மற்றும் சுருக்கமாக எழுத்து மற்றும் பேச்சி மூலம் தெரிவிக்கும் திறன். இதில் நிறுவனங்களின் தேவைக்கேற்ப ஆங்கிலம் மற்றும் பிற மொழி திறனும் அடங்கும். மேலும் மற்றவர்கள் கருத்தை முழுமையாகக் கேட்டு அதைப் புரிந்துகொண்டு செயல் படும் திறன் மிக முக்கியம். 


சிக்கல் தீர்க்கும் திறன்கள் (Problem Solving Skills) 

ஒரு சிக்கலை புரிந்துகொண்டு, அதை நன்கு ஆராய்ந்து அதற்கான மூல கரணங்கள் மற்றும் அதன் தாக்கங்களை கண்டறிந்து அதற்கான தீர்வை காணும் திறன் இன்றைய பொழுதில் பெரிதும் எதிர்பார்க்கப் படுகின்றன. 


உங்கள் முன்முயற்சி மற்றும் சுய உந்துதல் (Using your initiative and being self-motivated) 

ஒரு புதிய சொந்த யோசனையை நீங்களாகவே முன் வந்து ஆர்வத்துடன் செய்து காட்டுவதைக் குறிக்கும். குறிப்பாக உங்களை நீங்களே இயக்க வேண்டும், எப்பொழுதும் மற்றவர் ஒரு செயலை சொன்ன பின் செய்வதையே வழக்கமாக வைத்துக்கொள்ளக் கூடாது. மேலும் எப்பொழுதும் உங்களை நீங்களே ஊக்குவித்துக்கொண்டிருக்க வேண்டும். 


குழு வேலை (Team working) 

ஒரு குழுவில் வெவ்வேறு பின்புலம் கொண்டவர்கள் இருக்கும் நிலையிலும் அவர்களுடன் சேர்ந்து ஒரு செயலை சிறப்பாகச் செய்யும் திறன்.


தொடர்ச்சியாகக் கற்றல் மற்றும் புதுப்பித்துக்கொள்ளுதல் (Continues learning and staying updated) 

உங்கள் துறை, துறை சார்ந்த புதிய வளர்ச்சிகளைத் தொடர்ந்து கற்றல் மற்றும் உங்களை அதில் புதுப்பித்துக்கொள்ளுதல் மிக அவசியம். 


பன்முகத்தன்மையை மதித்தல் (Valuing diversity) 

உங்களிடமிருந்து வயது, பாலினம், தேசியவாதம், இனம், இயலாமை மற்றும் பல விஷயத்தில் வேறுபாடு கொண்ட வெவ்வேறு நபர்களுடன் சேர்ந்து ஒரு செயலில் ஈடுபடுதல் மற்றும் அவர்கள் தேவைகளை கருத்தில் கொண்டு செயல்படுதல். 


நிறுவன திறன்கள் (Organisational skills) 

உங்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலையின் முன்னேற்றத்தைக் கண்காணித்து, காலக்கெடு மற்றும் இலக்கைச் சிறந்த முறையில் சந்திக்கத் திட்டமிடுவது. 


வேலை அழுத்தம் மற்றும் காலக்கெடை சமாளிக்கும் திறன் (Working under pressure and to deadlines) 

வேலையில் காலக்கெடுவுடன் வரும் அழுத்தத்தைச் சமாளித்து அதை எதிர்கொள்ளும் திறன். இந்த திறன்கள் எல்லாம் பொதுவாக மற்றும் மிக முக்கியமாக வேலை வாய்ப்பு அளிக்கும் நிறுவனங்களால் எதிர்ப்பார்க்கப்படுகின்றன.

gyanamite.com