தமிழக அரசு பள்ளிக்கூடங்களில் சீருடையில் மாற்றம்

தமிழக அரசு பள்ளிக்கூடங்களில் சீருடையில் மாற்றம்

அரசு பள்ளிக்கூட சீருடைகள் 1-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை மாணவ-மாணவிகளுக்கு வருகிற கல்வி ஆண்டில்(2018-2019) மாற்றப்படுகிறது. 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை ஒரு நிறத்தில் சீருடைகளும், 6-ம் வகுப்பு முதல் 8-வது வகுப்பு வரை மற்றொரு நிறத்திலும், 9 மற்றும் 10 வகுப்புகளுக்கு வேறு ஒரு நிறத்திலும், பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்பு மாணவர்-மாணவிகளுக்கு இன்னொரு நிற சீருடைகளும் என்று 4 வகையாக மாற்றப்பட உள்ளது. 

1-ம் வகுப்பு முதல் 8-வது வகுப்பு வரை சத்துணவு சாப்பிடும் மாணவ-மாணவிகளுக்கு விலை இல்லா சீருடைகள் வழங்கப்படுகிறது. 9-வது வகுப்பு முதல் பிளஸ்-2 வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு சீருடைகள் 20 அல்லது 30 சதவீத தள்ளுபடி விலையில் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.