ரூ.12 கோடி செலவில் பிரம்மாண்டமாக  2.O படத்தின் இசை வெளியீடு...

ரூ.12 கோடி செலவில் பிரம்மாண்டமாக  2.O படத்தின் இசை வெளியீடு...

சங்கர் இயக்கத்தில் ரஜினி, எமி ஜாக்சன், அக்‌ஷய் குமார் நடிப்பில் உருவாகி இருக்கும் 2.O படத்தின் இசையை அதிக கோடி செலவில் பிரம்மாண்டமாக வெளியிட இருக்கிறார்கள்.

‘கபாலி’ படத்தின் வெற்றிக்குப் பிறகு ரஜினி, சங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் ‘2.0’ படத்தில் நடித்து வருகிறார். ‘எந்திரன்’ படத்தின் இரண்டாம் பாகமான ‘2.0’ படத்தை ‘லைகா புரொடக்‌ஷன்’ நிறுவனம் சார்பில் சுபாஷ்கரன் தயாரித்து வருகிறார். இதில் ரஜினிக்கு ஜோடியாக எமி ஜாக்சன் நடித்துள்ளார். மேலும் வில்லன் வேடத்தில் அக்‌ஷய் குமார் நடித்துள்ளார்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வரும் இதற்கு நிரவ்ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். சமீபத்தில், 3டி மேக்கிங் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டது. இது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வைரலாக பகிரப்பட்டது. இன்னும் ஒரு பாடல் காட்சியின் படப்பிடிப்பு மட்டுமே படமாக்க இருக்கிறார்கள். தற்போது, படத்தின் பின்னணி வேலைகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழாவை வருகிற அக்டோபர் 27-ஆம் தேதி துபாயில் நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். மிக பிரம்மாண்டமாக நடைபெறவிருக்கும் இந்த ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சிக்கே ரூ.12 கோடிக்கு மேல் பட்ஜெட் போட்டுள்ளனராம். 

படத்தின் டீசர் வெளியீட்டு விழாவை நவம்பர் மாதம் ஹைதராபாத்திலும், டிசம்பர் மாதம் டிரையிலர் சென்னையிலும் நடத்தவுள்ளனர். படத்தை அடுத்த ஆண்டு (2018) ஜனவரி மாதம் ‘3டி’ தொழில்நுட்பத்தில் வெளியிடவுள்ளனர்.