2.0 படத்தின் காட்சி இணையதளத்தில் லீக்.. படக்குழு அதிர்ச்சி!

  2.0 படத்தின் காட்சி இணையதளத்தில் லீக்.. படக்குழு அதிர்ச்சி!

பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கி சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் அனைவராலும் மிகவும் எதிர்ப்பார்க்கப்படும் படம் 2.ஓ.இன்று இப்படத்தின் காட்சிகளின் புகைப்படம் சமூக வலைத் தளங்களான பேஸ்புக், ட்விட்டர் மற்றும் வாட்ஸ் ஆப்-ல் வைரலாக பரவி வருகிறது.

ரோபோ எமி ஜாக்சன் இயக்கும் வாகனம் ஒன்றை, ரோபோ ரஜினி தள்ளுவது போன்ற காட்சி அதில் இடம்பெற்றுள்ளது. இப்புகைப்படம் வெளியானது படக் குழுவினரை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.2.ஓ படத்தின் போஸ்ட் ப்ரோடக்ஷன் வேலைகள் வேகமாக நடந்து வருகின்றன. ஜனவரி 25ல் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளது லைகா நிறுவனம்.

இந்தப் படம் தள்ளிப் போகலாம் என்று ஒரு பேச்சு இருந்தது. ஆனால் எக்காரணத்தைக் கொண்டும் தள்ளிப் போடமாட்டோம். சொன்ன தேதியில் ரிலீஸ் செய்வோம் என்று கூறியுள்ளது லைகா.இந்திய சினிமா வரலாற்றில் இல்லாத அளவுக்கு 11000 அரங்குகளில் இந்தப் படம் வெளியாகவிருப்பது குறிப்பிடத்க்கது.