டெஸ்ட்டியூப் முறையில் குழந்தை பெற்றெடுத்த நடிகை ரேவதி

டெஸ்ட்டியூப் முறையில் குழந்தை பெற்றெடுத்த நடிகை ரேவதி

சுமார் 35 ஆண்டுகளுக்கு மேலாக திரைத்துறையில் இருந்து நடிகை ரேவதி தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அழகு சீரியலில் நடித்து வருகிறார். இந்நிலையில், கடந்த சில நாட்களாக இவரை பற்றியும், இவரது மகள் பற்றி பல்வேறு செய்திகள் உலா வருகின்றன.மஹி தத்தெடுக்கப்பட்ட பிள்ளை என எல்லாரும் நினைத்தார்கள்.

இல்லை அவள் என் பிள்ளை தான் என விளக்குவதற்காக தான் நான் இந்த விஷயத்தை வெளியே சொன்னேன். டெஸ்ட் டியூப் மூலம் குழந்தை பெற்றுக்கொள்வது என்பது சாதாரண விஷயம். அதில் ஒன்றும் புதுமை ஏதும் இல்லை.கணவருடன் விவாகரத்துப் பெற்ற பிறகு, எனக்காக ஒரு குழந்தை வேண்டும் என நினைத்தேன். நன்கு யோசித்து முடிவெடுத்து, டெஸ்ட்டியூப் முறையில் மகள் மஹியைப் பெற்றெடுத்தேன்