பிரம்மாண்ட இயக்குனர் இயக்கத்தில் நடிக்கும் அஜித்...?

பிரம்மாண்ட இயக்குனர் இயக்கத்தில் நடிக்கும் அஜித்...?

'விவேகம்' படத்தைத் தொடர்ந்து அஜித் நடிக்கவுள்ள அடுத்த படத்தை பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் அஜித் நடிப்பில் வெளியான படம் ‘விவேகம்’.‘வீரம்’, ‘வேதாளம்’படத்தை தொடர்ந்து விவேகம் படத்தை சிவா இயக்கி இருந்தார். கலவையான விமர்சனத்தை எதிர்கொண்டாலும், வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. மேலும், இப்படத்தின் படப்பிடிப்பின் போது, அஜித்துக்கு கையில் ஏற்பட்ட காயத்தால் அறுவை சிகிச்சை செய்து கொண்டு தற்போது ஒய்வெடுத்து வருகிறார்.

இந்நிலையில் அஜித்தின் அடுத்த படம் குறித்து, பல்வேறு தகவல்கள் வெளியான வண்ணம் இருக்கிறது. தற்போது '2.0' படத்தைத் தொடர்ந்து சங்கர் இயக்கவுள்ள அடுத்த படத்தில் அஜித் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. மேலும் இப்படத்தை ஏ.எம்.ரத்னம் தயாரிக்கவுள்ளதாகவும், அனிருத் இசையமைக்கவிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதற்குமுன் அஜித்தின் அடுத்த படத்தையும் சிவாவே இயக்கவிருப்பதாகவும், இதற்கான கதை விவாதம் தொடங்கி நடைபெற்று வருவதாகவும் கூறப்பட்டது. ஆகவே, அஜித்தின் அடுத்த பட இயக்குனர் யார் என்பது அவருடைய ஓய்வுக்குப் பிறகு முடிவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.