நடிகர் அமிதாப் பச்சன் மருத்துவமனையில் அனுமதி

நடிகர் அமிதாப் பச்சன் மருத்துவமனையில் அனுமதி

நடிகர் அமிதாப் பச்சன் உடல்நலக்குறைவால் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 

அமிதாப் பச்சன் (75) `தக்ஸ் ஆஃப் ஹந்தோஸ்தான்' என்ற படத்தில் நடித்து வருகிறார். அமீர் கான், கத்ரீனா கெய்ப் நாயகன், நாயகியாக நடிக்கும் இந்த படத்தின் படப்படிப்பு ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடந்து வந்தது. இதில் அமிதாப் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஜெய்ப்பூரில் நடத்தப்பட்டு வருகிறது.
இதில் நடிகர் அமிதாப் பச்சன் சில மாதங்களாக ஓய்வின்றி தொடர்ந்து படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளதாகவும், இரவில் தூக்கமில்லாமல் படப்பிடிப்பில் கலந்து கொண்டதாலும் உடல் சோர்வு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட உடல் சோர்வால் அமிதாப் படப்பிடிப்பில் கலந்து கொள்ள முடியவில்லை. இதையடுத்து அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மருத்துவர்கள் முதலுதவி அளித்தனர்.