காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் தாமதம்...மத்திய அரசுக்கு கமல்ஹாசன் கண்டனம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் தாமதம்...மத்திய அரசுக்கு கமல்ஹாசன் கண்டனம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் மத்திய அரசு தாமதம் இந்த அநீதியைத் தமிழர்கள் ஒருபோதும் மறக்க மாட்டார்கள் என கமல்ஹாசன் கூறி உள்ளார்.  காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் , தமிழகத்திற்கு அநீதி இழைக்கும் மத்திய அரசை தமிழக மக்கள் ஒருபோதும் மறக்கமாட்டார்கள் என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் விமர்சித்துள்ளார்.

உச்சநீதிமன்ற இறுதி தீர்ப்பில் குறிப்பிடப்பட்ட ஸ்கீம் என்ற வார்த்தைக்கு விளக்கம் கேட்டு மத்திய அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.இந்த மனுக்களை கடந்த 9ம் தேதி ஒன்றாக விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, ஸ்கீம் என்ற வார்த்தைக்கு விளக்கம் கேட்டு கடைசி நேரத்தில் மனு தாக்கல் செய்த மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்தது. மேலும், காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பில் குறிப்பிடப்பட்டதையே ஸ்கீம் என்று குறிப்பிட்டோம். இதுதொடர்பான வரைவு செயல்திட்டத்தை தயார்படுத்தி மத்திய அரசு மே 3ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும். 

செயல் திட்டத்தை உருவாக்குவதில் இருந்து மத்திய அரசு தப்பிக்க முடியாது. நீதிமன்றம் உத்தரவிட்டது மத்திய அரசுக்குத்தான் என்பதால், எந்த மாநிலத்துடனும் கலந்தாலோசிக்க தேவையில்லை. காவிரி விவகாரம் தொடர்பான வரைவு செயல் திட்டத்தை மே 3ம் தேதிக்குள் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை மே 3ம் தேதிக்கு உத்தரவிட்டது.

இதுதொடர்பாக டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள கமல் கூறி இருப்பதாவது:-

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் மத்திய அரசு தாமதம் செய்கிறது. தாமதிக்கப்பட்ட நீதி; மறுக்கப்பட்ட நீதி. இந்த அநீதியைத் தமிழர்கள் ஒருபோதும் மறந்துவிட மாட்டார்கள் என கமல் பதிவிட்டுள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல்,மீண்டும் தாமதம் செய்கிறது மத்திய அரசு.
“தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி” இந்த அநீதியைத் தமிழர்கள் ஒருபோதும் மறந்துவிட மாட்டார்கள்.