தமிழ் திரைப்பட நகைச்சுவை நடிகர் கிருஷ்ணமூர்த்தி காலமானார்

தமிழ் திரைப்பட நகைச்சுவை நடிகர் கிருஷ்ணமூர்த்தி காலமானார்

தமிழ் திரைப்பட நகைச்சுவை நடிகர் கிருஷ்ணமூர்த்தி. இவர் குழந்தை இயேசு என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். பின்னர் நான் கடவுள், தவசி, விஜய் ஆண்டனியின் நான் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் படங்களில் நடித்துள்ளார். 50-க்கும் மேற்பட்ட படங்களுக்கு புரொடக்‌ஷன் மேனேஜராக இருந்திருக்கிறார்.

கேரள மாநிலம் குமுளியில் ‘பேய் மாமா’ திரைப்படத்தின் படப்பிடிப்பிற்கு சென்றுள்ளார். அங்கு தீடிரென ஏற்பட்ட மாரடைப்பால் கிருஷ்ணமூர்த்தி உயிரிழந்தார். இவரது உடல் இன்று மாலை சென்னைக்கு கொண்டு வரப்படுகிறது. கிருஷ்ண மூர்த்தி மறைவிற்கு திரையுலகினர் பலரும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.கிருஷ்ணமூர்த்தி மனைவி பெயர் மகேஷ்வரி. இவர்களுக்கு இரண்டு மகன்கள். பெரிய மகன் பிரஷாந்த். இரண்டாவது மகன் கெளதம் இயக்குநர் ஆக முயற்சி செய்து வருகிறார்.