தீம் மியூசிக்குடன் வெளியான தர்பார் மோஷன் போஸ்டர்...!

தீம் மியூசிக்குடன் வெளியான தர்பார் மோஷன் போஸ்டர்...!

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் திரைப்படம் ‘தர்பார்’. பேட்ட படத்தின் வெற்றிக்கு பிறகு ரஜினி நடிப்பதாலும், நீண்ட இடைவெளிக்கு பிறகு போலீஸ் அதிகாரியாக அதிரடியான கதாபாத்திரத்தில் நடிப்பதாலும் படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. தர்பார் படத்தில் நயன்தாரா நாயகியாக நடித்துள்ளார். தர்பார் படத்தின் படப்பிடிப்பு நிறைவு அடைந்துவிட்டது. பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது

தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய நான்கு மொழிகளில் வெளியாகி இருக்கும் தர்பார் மோஷன் போஸ்டரை, அந்தந்த மொழி பட பிரபலங்கள் வெளியிட்டுள்ளனர். அதன்படி தமிழில் கமல்ஹாசனும், மலையாளத்தில் மோகன்லாலும், இந்தியில் சல்மான் கானும் தெலுங்கில் மகேஷ் பாபுவும் வெளியிட்டனர். வருகிற ஜனவரி மாதம் பொங்கல் விருந்தாக 'தர்பார்' திரைக்கு வருகிறது.