மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ‘பேட்டரி டார்ச்’ சின்னம் ஒதுக்கீடு

மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ‘பேட்டரி டார்ச்’ சின்னம் ஒதுக்கீடு

நடிகர் கமல்ஹாசன் தனது மக்கள் நீதி மய்யம் கட்சியை கடந்த ஆண்டு பிப்ரவரி 21-ந்தேதி மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் அறிவித்தார். பாராளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி 40 தொகுதிகளிலும் போட்டியிட உள்ளது. இதற்காக, தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களிடம் இருந்து கமல்ஹாசன் விருப்ப மனுக்களை பெற்று வருகிறார்.

இந்நிலையில் பாராளுமன்ற தேர்தலுக்காக மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ‘பேட்டரி டார்ச்’ சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளது. அதேவேளையில் தங்களுக்கு ‘மோதிரம்’ சின்னம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு, அச்சின்னம் வழங்கப்படவில்லை. மாறாக தமிழ்நாடு இளைஞர் கட்சிக்கு மோதிரம் சின்னத்தை ஒதுக்கீடு செய்துள்ளது.