விஜய் வந்தால் மனதார ஏற்போம்- தமிழக காங்கிரஸ் தலைவர்

விஜய் வந்தால் மனதார ஏற்போம்- தமிழக காங்கிரஸ் தலைவர்

பிகில் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் விஜய் ஆளும் கட்சியை விமர்சிக்கும் விதமாகப் பேசினார்.  இதற்கு அதிமுக நிர்வாகிகள் தொடர்ச்சியாகக் கண்டனங்களைத் தெரிவித்தனர். அப்போது விஜய்க்கு தமிழ்நாடு காங்கிரஸ்  கட்சி  ஆதரவு தெரிவித்தது.தொடர்ந்து, நடிகர் விஜய் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடந்த போதும், விஜய்க்கு ஆதரவாக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பேசியிருந்தார். 

இந்த நிலையில்  காங்கிரஸ் கட்சியில் இணைய நடிகர் விஜய்க்கு அழைப்பு விடுக்கப்படுமா என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியிடம் கேட்டதற்கு ரஜினிக்கு சலுகை வழங்கியதை போல், விஜய்க்கு 24 மணி நேர அவகாசம் கூட வருமான வரித்துறை வழங்காது ஏன்? வருமானவரித்துறை ரஜினிக்கு  ஒரு அணுகு முறை,  விஜய்க்கு ஒரு அணுகுமுறை  என கடைபிடிக்கிறது.காங்கிரஸ் கட்சிக்கு விஜய் வந்தால் மனதார ஏற்போம், ஆனால் அழைப்பு ஏதும் விடுக்கவில்லை என கூறினார்.