அரசியலில் கறை படிந்துள்ளது மாணவர்கள் ஒதுங்கக்கூடாது - கமல்ஹாசன் பேச்சு

அரசியலில் கறை படிந்துள்ளது மாணவர்கள் ஒதுங்கக்கூடாது - கமல்ஹாசன் பேச்சு

மாணவர்கள் அரசியலை பார்த்து ஒதுங்கக்கூடாது எனவும் கரை வேட்டி கட்டியவர்களால் அரசியலில் கறை படிந்துள்ளது எனவும் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

சென்னை, லயோலா கல்லூரியில் இளைஞர்கள் அதிக அளவில் சமூக வலை தளங்களை பயன்படுத்துவது குறித்த கலந்துரையாடல் இன்று காலை நடைபெற்றது.
நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் இதில் கலந்துகொண்டு மாணவர்களுடன் கலைந்துரையாடினார்.‘மாணவர்கள் அரசியல் பேசுவதில் இருந்து ஒதுங்கி நிற்க கூடாது. அரசியல் பேசாமல் கல்வி, விவசாயம் முன்னேறாது. கரை வேட்டி கட்டியவர்கள் பார்த்துக்கொள்வார்கள் என்று ஒதுங்கி நிற்பதால் தான் கறை படிந்துள்ளது. நான் பேசுவது அரசியல் தான். சந்தேகம் வேண்டாம்.

மாணவர்கள் தங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். ஆண்டுக்கு ஒரு புதிய திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும். வாரிசு அரசியல் என்பது சரியானது அல்ல. தமிழக அரசியலில் இருந்து வாரிசு அரசியலை பிரிக்க முடியாது. அதனால் தான் உங்களையும் சேர்த்து என் குடும்பத்தை பெரிதாக்கினேன்.இவ்வாறு அவர் பேசினார்.