16 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் மிரட்ட வரும் கமல்ஹாசனின் ஆளவந்தான் !

16 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் மிரட்ட வரும் கமல்ஹாசனின் ஆளவந்தான் !

உலகநாயகன் கமல்ஹாசன் 2001-ஆம் ஆண்டுக்கு பிறகு புதுமையான முறையில் திரையரங்குகளை மீண்டும் மிரட்ட வருகிறார்.

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 2001-ல் வெளியான படம் `ஆளவந்தான்'. தனது ஒவ்வொரு படத்திலும் ஏதேனும் ஒரு வித்தியாச முயற்சியில் ஈடுபடும் கமல், இப்படத்தில் போலீஸ் அதிகாரி, சைகோ என இரு வேடத்தில் நடித்திருந்தார். இதில் சைகோ கமலின் கதாபாத்திரம் பெரும் வரவேற்பை பெற்றது. அனைவராலும் விரும்பி பார்க்கப்பட்டது. 

எனினும் வசூலில் இப்படம் நல்ல வரவேற்பை பெறவில்லை என்று தான் கூற வேண்டும். கமல் எழுதத்தில், சுரேஷ் கிருஷ்ணா இயக்கி இருந்த இப்படம், தமிழ் சினிமாவை ஒரு புதுமையான கண்ணோட்டத்தோடு பார்க்க வைத்தது. அதன்படி இப்படத்திற்கு பின்னர் பல வித்தியாசமான கதைகள் கொண்ட படங்கள் வெளியாகி வரவேற்பை பெறத் தொடங்கின. தற்போதைய சூழலை பொறுத்தவரை, சினிமா ரசிகர்கள் புதுமையை ரசிக்கிறார்கள். அதனை ஏற்றுக்கொள்ளவும் செய்கிறார்கள். வசனங்கள் பெறும் வரவேற்பை பெற்றன.

இந்நிலையில், `ஆளவந்தான்' படத்தை டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் மாற்றியமைத்து மீண்டும் வெளியிட படத்தின் தயாரிப்பாளரான தாணு முடிவு செய்திருக்கிறார். மேலும் நீளம் கருதி குறைக்கப்பட்ட சண்டைக் காட்சிகளும் இணைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தை சுமார் 500 திரையரங்குகளில் வெளியிட தாணு முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படத்தில் ரவீனா தண்டன், மனீஷா கொய்ராலா, வல்லப் வியாஸ், கோலாபுடி மாருதி ராவ், சரத் பாபு, அனு ஹாசன், ரியாஸ் கான் என பலர் நடித்திருந்தனர்.