ரஜினிகாந்த் இன்னும் 6 மாதத்துக்குள் கட்சி தொடங்குவார்- கராத்தே தியாகராஜன்

ரஜினிகாந்த் இன்னும் 6 மாதத்துக்குள் கட்சி தொடங்குவார்- கராத்தே தியாகராஜன்

சென்னை மாநகராட்சி முன்னாள் துணை மேயர் கராத்தே தியாகராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோரது மறைவுக்குப் பிறகு அரசியலில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை ரஜினிகாந்த் நிரப்புவார்.ரஜினிகாந்த் நிச்சயம் அரசியல் கட்சி தொடங்குவார். இன்னும் 6 மாதத்துக்குள் அவர் கட்சி தொடங்குவார்.

அடுத்து வரும் 2021 தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று அவரே தமிழகத்தின் முதல்வராகவும் பதவி ஏற்பார்.அரசியலுக்கு அவரது வருகை, தனிக்கட்சி தொடக்கம் என்பது தமிழகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவது உறுதி. எல்லோரும் எதிர்பார்க்கும் தலைவராக ரஜினி விளங்குவார்.

அவர் ஏற்கனவே 2017-லேயே அரசியலுக்கு வருவேன். 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவோம் என்று அறிவித்து விட்டார்.இவ்வாறு அவர் கூறினார்.