மோகன்லால், பிரபுதேவா, ஷங்கர் மகாதேவன் உள்ளிட்டோருக்கு பத்மஸ்ரீ விருது!

மோகன்லால், பிரபுதேவா, ஷங்கர் மகாதேவன் உள்ளிட்டோருக்கு பத்மஸ்ரீ விருது!

சினிமா பிரபலங்கள் மோகன்லால், பிரபுதேவா, ஷங்கர் மகாதேவன் உள்ளிட்டோருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பத்ம விருதுகளை வழங்கி கவுரவித்தார். 
ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு மத்திய அரசு உயரிய விருதான பத்மஸ்ரீ, பத்ம விபூஷண், பத்மபூஷண் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டிற்கான பத்ம விருது பெறுபவர்கள் பட்டியல் சமீபத்தில் வெளியிடப்பட்டது.

திரைத்துறை சார்பில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலுக்கு பத்மபூஷன் விருதும், நடிகர் பிரபுதேவா, மனோஜ் பாஜ்பய், மறைந்த நடிகர் காதர்கான், பாடகர் ஷங்கர் மகாதேவன், டிரம்ஸ் சிவமணி, நார்த்தகி நடராஜ் உள்ளிட்டோருக்கு பத்மஸ்ரீ விருதும் அறிவிக்கப்பட்டிருந்தது.இந்த நிலையில், இன்று (11.3.19) டெல்லியில் நடந்த விருது வழங்கும் விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பத்ம விருதுகளை வழங்கி கவுரவித்தார். மோகன்லால், பிரபுதேவா, ஷங்கர் மகாதேவன், டிரம்ஸ் சிவமணி உள்ளிட்ட திரைத்துறையை சேர்ந்த பலரும் பத்ம விருதுகளை பெற்றுக் கொண்டனர்.