‘பத்மாவத்’ என பெயர் மாற்றத்துடன் வருகிற 25-ந் தேதி பத்மாவதி படம் ரிலீஸ்

‘பத்மாவத்’ என பெயர் மாற்றத்துடன் வருகிற 25-ந் தேதி பத்மாவதி படம் ரிலீஸ்

நடிகை தீபிகா படுகோனே நடித்த சித்தூர் ராணி பத்மாவதியின் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட பத்மாவதி திரைப்படத்துக்கு எதிர்ப்பு கிளம்பியது. இதனால் படத்தின் தலைப்பு ‘பத்மாவத்’ என மாற்றம் செய்யப்பட்டும், சில காட்சிகள் நீக்கப்பட்டும், கனவு பாடல் காட்சிகளில் திருத்தம் செய்யப்பட்டும் தணிக்கை குழுவுக்கு அனுப் பப்பட்டது.

இதையடுத்து படத்தின் தணிக்கை குழு ‘யு/ஏ’ என அனைவரும் பார்க்கும் வகையிலான சான்றிதழ் அளித்து அனுமதி வழங்கியுள்ளது.அனைத்து தடைகளையும் நீக்கியதை தொடர்ந்து படத்தை வெளியிடுவதற்கான ஏற்பாடுகளில் தயாரிப்பு நிறுவனம் ஈடுபட்டுள்ளது.வருகிற 25-ந் தேதி ‘பத்மாவத்’ படம் நாடு முழுவதும் ரிலீஸ் ஆகிறது. இது தவிர 60 நாடுகளிலும் படம் திரையிடப்படுகிறது.