உலகிலேயே மிகப்பெரிய தேசியக்கொடியை உருவாக்கி நடிகர் பவன் கல்யாண் புதிய சாதனை

உலகிலேயே மிகப்பெரிய தேசியக்கொடியை உருவாக்கி நடிகர் பவன் கல்யாண் புதிய சாதனை

தெலுங்கு சினிமாவில் இளம் ஹீரோக்களின் படையெடுப்பு துவங்கி விட்டாலும், இப்போதும் முன்னணி நடிகராக ஆதிக்கம் செலுத்தி வருகிறார் பவன் கல்யாண்.  அதுமட்டுமல்ல ஜனசேனா என்கிற கட்சியை ஆரம்பித்து அரசியலிலும் குதித்த பவன் கல்யாண் அடுத்தடுத்து வரும் தேர்தலுக்காக தனது கட்சியில் தீவிர பணிகள் மேற்கொண்டு வருகிறார்.

இந்தநிலையில் தான், உலகிலேயே மிகப்பெரிய தேசியக்கொடியை உருவாக்கி புதிய சாதனை ஒன்றையும் படைத்துள்ளார். இந்த தேசிய கோடி சுமார் 183 அடி நீளமும் 122 அடி உயரமும் கொண்டது. இந்த கொடியை 'கலாம் விம்பிரான்ட்ஸ்' என்று அழைக்கப்பட்ட ஒரு அமைப்பு தயாரித்து உள்ளது. இந்திய சுதந்திர போராட்டத்தின் முதல் போரை நினைவுகூரும் விதமாக இந்த கொடியை உருவாக்கியுள்ள பவன் கல்யாண், இன்று காலை ஐதராபாத்தில் உள்ள என்.டி.ஆர் ஸ்டேடியத்தில் இந்த கொடி அறிமுகம் செய்யப்பட்டது.

நிகழ்ச்சியில் பேசிய  பவன் கல்யாண்  கல்வியாளர் மற்றும் தத்துவவாதியான முன்னாள் ஜனாதிபதி சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் தேசிய கொடி எந்தச் சாதியோ, மதத்திற்கோ, கட்சிக்கும் சொந்தம் அல்ல, அது அனைவருக்கும் சொந்தமானது என்று கூறியதை மேற்கோள் காட்டினார்.இந்நிகழ்வில் கலந்து கொண்ட பல இளைஞர்களுடன்  கல்யாண் தேசிய ஒருங்கிணைப்பு உறுதிமொழியை எடுத்து கொண்டார்.