அரவிந்த் கெஜ்ரிவாலுடன் நடிகர் பிரகாஷ்ராஜ் திடீர் சந்திப்பு

அரவிந்த் கெஜ்ரிவாலுடன் நடிகர் பிரகாஷ்ராஜ் திடீர் சந்திப்பு

பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்த நடிகர் பிரகாஷ்ராஜ் டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலை இன்று சந்தித்து ஆலோசனை நடத்தினார். பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு மற்றும் பிரதமர் மோடிக்கு எதிராக தொடர்ந்து கருத்துகளை தெரிவித்துவந்த  நடிகர் பிரகாஷ்ராஜ் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் பெங்களூர் மத்திய தொகுதியில் போட்டியிடப் போவதாக சமீபத்தில் அறிவித்தார்.

இந்நிலையில், டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலை இன்று சந்தித்த பிரகாஷ்ராஜ் அவருடன் பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.தனது அரசியல் பயணத்துக்கு கெஜ்ரிவால் அளித்துவரும் ஆதரவுக்கு நன்றி தெரிவித்து, இந்த சந்திப்பு தொடர்பான தகவலை தனது டுவிட்டர் பக்கத்தில் பிரகாஷ்ராஜ் பதிவிட்டுள்ளார்.