ஹீரோயினாக அவதாரம் எடுக்கும் சீரியல் நடிகை...

ஹீரோயினாக அவதாரம் எடுக்கும் சீரியல் நடிகை...

சின்னத்திரையில் பிரபலமான ப்ரியா பவானி ஷங்கர் வெள்ளித்திரையில் புதிய படம் ஒன்றில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

சந்தானம், சிவகார்த்திகேயன் என பலரும் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து நடிகர்களாக உயர்ந்திருக்கின்றனர். அந்த வகையில் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமான ப்ரியா பவானி ஷங்கர் வெள்ளித்திரையில் காலடி எடுத்து வைக்க இருக்கிறார்.பிரபல தொலைக்காட்சியில் செய்தி வாசிக்கும் தொகுப்பாளினியாக அறிமுகமானவர் ப்ரியா பவானி ஷங்கர். பின்னர் சின்னத்திரையில் ஒரு சில தொடர்களிலும் நடித்து வந்தார். பின்னர் சில நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாகவும் பணியாற்றினார். 

இந்நிலையில், தனது படிப்பிற்காக வெளிநாடு சென்றுள்ள ப்ரியா, விரைவில் திரைப்படம் ஒன்றில் நடிகையாக நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.இதுகுறித்து ப்ரியா தரப்பில் இருந்து தெரிவிக்கப்படும் தகவல்களாவது,படத்தில் நடிப்பது உறுதியாகி உள்ளதாகவும், அதற்கான அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் சில நாட்களில் வெளியாகஉள்ளதாகவும் கூறப்படுகிறது.