ரஜினியின் ‘காலா’ ஏப்.27-ல் ரிலீஸ்

ரஜினியின் ‘காலா’ ஏப்.27-ல் ரிலீஸ்

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் காலா திரைப்படம் ஏப்ரல் 27-ந் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.கபாலி' படத்துக்கு பிறகு மீண்டும் ரஜினிகாந்த்தை வைத்து பா.ரஞ்சித் இயக்கியுள்ள படம் 'காலா'. இப்படத்தை தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.காலா' படம் ஷங்கரின் இயக்கத்தில் உருவாகும் '2.ஓ' படத்தின் ரிலீஸுக்கு பிறகு வெளியாகும் எனக் கூறப்பட்டது.

ஆனால், '2.ஓ' தாமதத்தால் 'காலா' முன்கூட்டியே வெளியாக இருக்கிறது. காலா திரைப்படம் ஏப்ரல் 27-ந் தேதி வெளியாகும் என நடிகர் தனுஷ் அறிவித்துள்ளார்.