கர்நாடக மக்களிடையே அமோக வரவேற்பு பெற்ற “காவிரி ஹீரோ”!

 கர்நாடக மக்களிடையே அமோக வரவேற்பு பெற்ற “காவிரி ஹீரோ”!

காவிரி நீர் விவகாரத்தில், கர்நாடக மக்களின் தேவைக்கு போக, மீதமுள்ள தண்ணீரை தமிழகத்திற்கு தர வேண்டும் என்று நடிகர் சிம்பு கருத்து தெரிவித்திருந்தார். மேலும் கன்னட மக்களை, சகோதர, சகோதரிகள் என்று பாசத்துடன் குறிப்பிட்டார். இவரது இச்செயல், கன்னட மக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத் தியுள்ளது. அத்துடன், “யுனைட்டி பார் ஹியுமனிட்டி” (மனித நேயத்துடன் ஒன்றுபடுவோம்) என்ற கோ‌ஷத்தையும் சிம்பு முன் வைத்து, “எனது கருத்தை வரவேற்கும் விதமாக கன்னட மக்கள் ஒரு டம்ளர் தண்ணீரை அங்குள்ள தமிழர்களுக்கு வழங்கி, நாங்கள் என்றும் தமிழக மக்களை ஆதரிப்போம் என்பதை நிரூபிக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.

சிம்புவின் இந்த கருத்து மற்றும் முயற்சிக்கு கன்னட மக்கள் மற்றும் கன்னட அமைப்பினர் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. மேலும், இதனை வரவேற்றும், காவிரி ஹீரோ என்று சிம்புவிற்கு பாராட்டு தெரிவித்தும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.இந்த பதிவுகள் நேற்று மாலை முதல் வைரலாக பரவி வருகிறது. இதனிடையே, சிம்புவின் கருத்தை வரவேற்கும் விதமாகவும், கன்னட-தமிழக மக்களிடையே சகோதரத்துவத்தை நிலைநாட்டவும், நட்புறவை வளர்க்கும் வகையிலும், கர்நாடக சம்ரக்‌ஷண வேதிகே என்ற கன்னட கூட்டமைப்பின் சார்பில், அதன் தலைவர் நட்ராஜ் தலைமையில், ஓசூர் அருகே கர்நாடக எல்லையான அத்திப்பள்ளி நுழைவாயிலில், ஓசூர்-பெங்களூர் நோக்கி சென்ற தமிழக பேருந்துகள் மற்றும் கார்களில் சென்ற பயணிகளுக்கும். லாரி, பஸ் ஓட்டுனர்களுக்கும், குடிநீர் பாட்டில்களை இலவசமாக வழங்கி மகிழ்ந்தனர்.