மீண்டும் மீண்டும் பிரியாணி வழங்கி படக்குழுவை ஆச்சரியப்படுத்திய அஜித்...

மீண்டும் மீண்டும் பிரியாணி வழங்கி படக்குழுவை ஆச்சரியப்படுத்திய அஜித்...

அஜித் நடிப்பில் தயாராகிவரும் படம் ‘விஸ்வாசம்’. சிவா இயக்கிவரும் இந்தப் படத்தில், நயன்தாரா ஹீரோயினாக நடிக்கிறார். மேலும், தம்பி ராமையா,  ரோபோ சங்கர், கலைராணி, யோகிபாபு, ரமேஷ் திலக் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். கடந்த சில படங்களில் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில்  நடித்த அஜித், இந்தப் படத்தில் இளமைத் தோற்றத்தில் நடித்து வருகிறார்.
 
‘விவேகம்’ படத்தைத் தயாரித்த சத்யஜோதி பிலிம்ஸ் இந்தப் படத்தைத் தயாரித்து வருகிறது. டி.இமான் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். இதுதான் முதன்முதலாக அஜித்துக்கு அவர் இசையமைக்கும் படம். இதன் முதல் ஷெட்யூல் ஹைதராபாத்தில் கடந்த மாதம் தொடங்கியது.முதல் ஷெட்யூல், பாடல் காட்சியுடன் தொடங்கியது.

முதல் ஷெட்யூலில் மட்டுமே 3 முறை எல்லாத் தொழிலாளர்களுக்கும் பிரியாணி போடச் சொல்லி படக்குழுவை ஆச்சரியப்படுத்தியுள்ளார் அஜித். அவருக்கு உடல்நிலை கொஞ்சம் சரியில்லாததால், இந்த முறை அவரால் பிரியாணி சமைக்க முடியவில்லை  என்று கூறப்படுகிறது. இந்தப் படத்தின் இரண்டாவது ஷெட்யூல் விரைவில் தொடங்க இருக்கிறது.