நான் முழுநேர அரசியல்வாதியாகவில்லை...ரஜினிகாந்த் பேட்டி I

 நான் முழுநேர அரசியல்வாதியாகவில்லை...ரஜினிகாந்த் பேட்டி I

ரஜினிகாந்த் முக்கிய விவகாரம் தொடர்பாக தன்னுடைய நிலைப்பாட்டை தெரிவிக்க மறுக்கிறார் என குற்றம் சாட்டப்படுகிறது. காவிரிமேலாண்மை வாரியம் அமைப்பது உள்ளிட்ட பல பிரச்சினைகளில் ரஜினிகாந்த் கருத்து கூறாமல் அமைதியாக இருக்கிறார் என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் விமர்சனம் செய்தார். ரஜினிகாந்த் இப்போது இமயமலையில் பயணம் மேற்கொண்டு உள்ளார்.

டேராடூனில் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், “இப்போது ஆன்மிகப் பயணமாக இமயமலை வந்து உள்ளேன். நான் ஒரு யாத்ரீகராக இங்கு வந்து உள்ளேன். இதில் அரசியல் பேசுவதற்கு எதுவும் கிடையாது. இப்போதுதான் அமிதாப்பச்சன் உடல்நிலைக்குறைவு தொடர்பாக தகவல் கிடைத்தது, அவர் விரைவில் நலம்பெற பிரார்த்திக்கிறேன் என்றார். அங்கு மீண்டும் செய்தியாளர்களிடம் பேசுகையில், “அரசியல் கேள்விகளுக்கு பதில் அளிக்க நான் விரும்பவில்லை. இப்போது வரையில் நான் முழுநேர அரசியல்வாதியாகவில்லை. என்னுடைய அரசியல் கட்சியையும் அறிவிக்கவில்லை,” என கூறினார்.