நீட் தேர்வுக்கு வெளிமாநிலம் செல்வது மிகப்பெரிய அநீதி...கமல்ஹாசன் கண்டனம்

நீட் தேர்வுக்கு வெளிமாநிலம் செல்வது மிகப்பெரிய அநீதி...கமல்ஹாசன் கண்டனம்

நீட் தேர்வு எழுதும் தமிழக மாணவர்களுக்கு அண்டை மாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டது மிகப்பெரிய அநீதி என்று கமல்ஹாசன் டிவிட் செய்துள்ளார்.இந்த முறை நீட் தேர்வு எழுதும் தமிழக மாணவர்கள் சிலருக்கு வடஇந்திய மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இது மாணவர்களுக்கு பெரிய அளவில் கஷ்டத்தை ஏற்படுத்தும். சிபிஎஸ்இ அறிவிப்பிற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இதில் சிபஎஸ்இக்கு எதிராக தீர்ப்பு வந்தது. ஆனால் இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சிபிஎஸ்இ மேல்முறையீடு செய்தது. தற்போது இதில் சிபிஎஸ்இ பிறப்பித்த உத்தரவு சரிதான், நீட் தேர்வு எழுதும் தமிழக மாணவர்களுக்கு அண்டை மாநிலங்களில்தான் தேர்வு எழுத வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது.இந்த கடைசி நேர மாற்றம் மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு தற்போது மக்கள் மய்ய கட்சியின் தலைவர் கமல்ஹாசன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இந்த டிஜிட்டல் இணையதள யுகத்தில் ஏழைத் தமிழ் மாணவர்களை கேரளத்திற்கும், ராஜஸ்தானுக்கும் நீட் எழுத அலைக்கழிப்பது அநீதி. இங்கிருந்தே எழுதலாமே? அதற்கு ஆவன செய்யட்டும் அரசும் ஆணையும்.அவர் தனது டிவிட்டில் ''இந்த டிஜிட்டல் இணையதள யுகத்தில் ஏழைத் தமிழ் மாணவர்களை கேரளத்திற்கும், ராஜஸ்தானுக்கும் நீட் எழுத அலைக்கழிப்பது அநீதி. இங்கிருந்தே எழுதலாமே? அதற்கு ஆவன செய்யட்டும் அரசும் ஆணையும்.'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.