கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுங்கள்.. நடிகர் அமிதாப் பச்சன்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுங்கள்.. நடிகர் அமிதாப் பச்சன்

சென்னை: 'கஜா' புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைவரும் உதவ வேண்டும் என, பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக, நடிகர் அமிதாப் பச்சன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவை மக்கள் நீதி மய்யக் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.வீடியோ வாயிலாக நடிகர் அமிதாப் பச்சன் கூறியதாவது, கடந்த நவம்பர் 15 ஆம் தேதி ஏற்பட்ட 'கஜா' புயல் தமிழகம், புதுச்சேரியில் பெரும் அழிவை விட்டுச் சென்றுள்ளது. அனைவரும் அவர்களுக்கு உதவ வேண்டும்.