விஜய் படத்தில் நடிக்க மறுத்த ஓவியா...

விஜய் படத்தில் நடிக்க மறுத்த ஓவியா...

சென்னை : விஜய் மூன்றாவது முறையாக இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸுடன் இணையும் 'விஜய் 62' படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க நடிகை ஓவியாவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஹீரோயின் வேடத்தில் மட்டுமே நடிக்க விரும்புவதாகக் கூறி மறுத்திருக்கிறார் ஓவியா.பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியதற்குப் பின், அவர் நடித்த ஒரு படம் கூட இன்னும் வெளிவரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது சக போட்டியாளர்கள் ஓவியாவை டார்ச்சர் செய்தும், தனது தனித்துவமான குணத்தால் மக்களின் அனுதாபத்தைப்பெற்றார் ஓவியா. அதுவே அவருக்கு ஆதரவு அலையை ஏற்படுத்தியது.இந்த வரவேற்பை வைத்து ஓவியாவைப் பட வாய்ப்புகள் தேடி வந்தன. அவற்றில் சம்பளத்தை உயர்த்தி பல படங்களை நிராகரித்த ஓவியா கடைசியில் ராகவா லாரன்ஸ் ஜோடியாக 'காஞ்சனா 3' படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார்.

இந்நிலையில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், விஜய் நடிக்கும் படத்தில் நடிக்க ஓவியாவை அணுகினார்கள். விஜய்யின் 62ஆவது படமாக உருவாக உள்ள இந்தப்படத்தில் 'தீரன்' படத்தில் நடித்த ரகுல் ப்ரீத் சிங் கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்தில் உள்ள முக்கிய வேடம் ஒன்றில் நடிக்க ஓவியாவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. தன்னிடம் கேட்கப்பட்டது ஹீரோயின் ரோலுக்காக இல்லை என்பதால் நடிக்க மறுத்துவிட்டார் ஓவியா.