நாடாளுமன்ற தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகிறார் நடிகர் பிரகாஷ்ராஜ்

நாடாளுமன்ற தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகிறார் நடிகர் பிரகாஷ்ராஜ்

புதுடெல்லி; பிரதமர் மோடிக்கு எதிராக சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்து வந்தவர் நடிகர் பிரகாஷ்ராஜ்.  இதனால் அவருக்கு எதிராக நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு கூட தொடரப்பட்டது.

அதன்பின் நான் ஒருபோதும் அரசியலுக்கு வரமாட்டேன் என மைசூரு நகரில் நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பொன்றில் கூறினார்.

இந்த நிலையில், அடுத்த வருடம் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட உள்ளேன் என்று அவர் தெரிவித்து உள்ளார்.

இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், ஒவ்வொருவருக்கும் புது வருட வாழ்த்துகள்.  ஒரு புதிய தொடக்கம்.  அதிக பொறுப்புணர்வு.  வருகிற நாடாளுமன்ற தேர்தலில் உங்களது ஆதரவுடன் சுயேட்சை வேட்பாளராக நான் போட்டியிட இருக்கிறேன்.  தொகுதி பற்றிய விவரங்கள் தெரிவிக்கப்படும்