பத்மாவதி திரைப்படத்தை ரிலீஸ் செய்ய மத்திய பிரதேசை தொடர்ந்து பஞ்சாப்பிலும் தடை

பத்மாவதி திரைப்படத்தை ரிலீஸ் செய்ய மத்திய பிரதேசை தொடர்ந்து பஞ்சாப்பிலும் தடை

சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் உருவாகியுள்ள வரலாற்றுப் படம் ‘பத்மாவதி’. ராஜஸ்தான் மாநிலம் சித்தூர்கர் பகுதியை ஆண்ட ராஜவம்சத்தைச் சேர்ந்த ராணி பத்மாவதி வாழ்க்கை வரலாற்றைக் அடிப்படையாக கொண்டு இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் ராணி பத்மாவதியின் கதாபாத்திரம் திரித்து சித்தரிக்கப்பட்டுள்ளதாக கூறி பாஜக, ராஜ்புத் சேனா, கர்னி சேனா போன்ற அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மேலும் இப்படத்தைத் வெளியிட தடை கோரி, 11 பேர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். 

இந்நிலையில் மத்திய பிரதேச மாநிலத்தில் பத்மாவதி திரைப்படத்தை வெளியிடுவதற்கு தடை விதிக்கப்படும் என முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் அறிவித்துள்ளார்.போபாலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய சவுகான், “ராணி பத்மாவதியின் கண்ணியத்துக்கு இழுக்கு ஏற்படும் வகையிலான எந்த திரைப்படமும் இங்கு வெளியாக முடியாது. பத்மாவதி படத்தில் ஆட்சேபனைக்குரிய காட்சிகள் இருந்தால் படத்தை திரையிட தடை விதிக்கப்படும்’ என்றார்.இதேபோல், பஞ்சாப் மாநில முதல்வர் அமரீந்தர் சிங்கும் இப்படத்திற்கு தடை விதிக்க உள்ளதாக கூறியுள்ளார். வரலாற்றைத் திரித்து கூறும் திரைப்படங்களை ரிலீஸ் செய்ய அனுமதிக்க மாட்டோம்.