பிரபல இந்தி நடிகர் சஷி கபூர் காலமானார்

பிரபல இந்தி நடிகர் சஷி கபூர் காலமானார்

மும்பை : பிரபல பாலிவுட் நடிகர் சஷி கபூர் காலமானார். அவருக்கு வயது 79. வயது மூப்பு மற்றும் நாள்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக அவரது உயிர் பிரிந்தது. 

உலக புகழ்பெற்ற இந்திய நடிகர்களில் ஒருவரான சசிகபூர் 160 படங்களில் நடித்துள்ளார். இவர் இதுவரை 3 முறை தேசிய விருது பெற்றுள்ளார். இவரது நடிப்புத்திறனை அங்கீகரித்த இந்திய அரசு 2011ம் ஆண்டு பத்ம பூஷன் விருதை வழங்கி கவுரவித்தது.

மேலும் இவர் 2015-ம் ஆண்டு திரைத்துறையின் மிக உயரிய விருதான தாதா சாகிப் பால்கே விருதும், 2010ம் ஆண்டு பிலிம்பேரின் வாழ்நாள் சாதனையாளர் விருதையும் பெற்றுள்ளார்.

இவரது மறைவுக்கு திரைத்துறையினர் மட்டுமன்றி பிரபலங்கள் பலரும் தங்கள் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.இந்தி நடிகர் சஷிகபூர் மறைவிற்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் ஆகியோர் டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளன