பழம்பெரும் கன்னட நடிகர் ஆர்.என்.சுதர்ஷன் காலமானார்

பழம்பெரும் கன்னட நடிகர் ஆர்.என்.சுதர்ஷன் காலமானார்

பெங்களூர் : தமிழ் உள்ளிட்ட பல மொழிப் படங்களில் நடித்த பழம்பெரும் கன்னட நடிகர் ஆர்.என்.சுதர்ஷன் காலமானார். அவருக்கு வயது 78.உடல்நலக்குறைவு காரணமாக கடந்த சில தினங்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சுதர்ஷன், சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். 60 படங்களில் ஹீரோவாக நடித்தவர் பின்னர், வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்தார். இதுவரை 250 படங்களுக்கும் மேல் நடித்திருக்கிறார்.

இவரது தந்தை ஆர்.நாகேந்திரா ராவ், கன்னட சினிமாவில் இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர் எனப் பிரபலமானவர். சுதர்ஷனின் சகோதர்களான ஆர்.என்.கிருஷ்ணா பிரசாத் மற்றும் ஆர்.என்.ராஜகோபால் ஆகியோரும் சினிமாவில் மிகவும் பிரபலமானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.சுதர்ஷன் தனது 21-வது வயதில், நாகேந்திரா ராவ் இயக்கிய, 'விஜயநகரடா வீரபுத்ரா' என்ற படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். சுமார் 60 படங்களில் ஹீரோவாக நடித்திருக்கிறார்.சுதர்ஷனுக்கு சைலாஸ்ரீ என்ற மனைவி உள்ளார். இவர் கன்னட சினிமாவின் முன்னாள் கதாநாயகி ஆவார்.