வல்லரசு இருக்கட்டும்: முதல்ல நல்லரசு கொடுங்கள்: விஜய்

வல்லரசு இருக்கட்டும்: முதல்ல நல்லரசு கொடுங்கள்: விஜய்

வல்லரசாவதைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம், முதலில் விவசாயிகளைக் காக்கும் நல்லரசாக மாற வேண்டும் என நடிகர் விஜய் தெரிவித்துள்ளார்.

தனியார் நிறுவனம் சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய விஜய், நாம் அனைவரும் நன்றாக இருக்கும் நிலையில், நமக்கெல்லாம் உணவளிக்கும் விவசாயிகள் நன்றாக இல்லை என வேதனை தெரிவித்தார்.

விவசாயிகளின் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டியது அவசியம் மட்டுமல்ல, அவசரமும் கூட என்றும் விஜய் அறிவுறுத்தினார். தற்போது ஆரோக்கியமில்லாத உணவே கிடைத்து வருவதாகவும், அடுத்த சந்ததிக்கு இதுவும் இல்லாமல் போய்விடுமோ என்ற அச்சம் ஏற்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

மூன்று வேளை உணவு எளிதில் கிடைப்பதால் அதன் மதிப்பு தெரியாமல் போய்விட்டதாகவும், அரிசியை உற்பத்தி செய்து விட்டு அதனை இலவசமாக வாங்குவதற்காக விவசாயிகள் ரேஷன் கடை வரிசையில் நிற்பதாகவும் நடிகர் விஜய் வேதனை தெரிவித்தார்.