நயன்தாரா - விஜய்சேதுபதி நேருக்கு நேர் மோதல்...

நயன்தாரா - விஜய்சேதுபதி நேருக்கு நேர் மோதல்...

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவும் விஜய்சேதுபதியும் திடீரென ஒருவருக்கொருவர் நேருக்கு நேர் மோதிக்கொள்ளும் சூழல் வந்துள்ளது.

 நயன்தாரா கலெக்டர் வேடத்தில் நடித்த 'அறம்' திரைப்படம் ரிலீசுக்கு தயாராகியுள்ள நிலையில் இந்த படம் வரும் 29ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில் இதே தினத்தில் விஜய்சேதுபதியின் 'கருப்பன்' திரைப்படத்தையும் வெளியிட அப்படத்தின் குழுவினர் முடிவு செய்துள்ளனர். 
 
ஏற்கனவே தொடர் வெற்றி பெற்று வரும் விஜய்சேதுபதியின் கருப்பன் திரைப்படம் ஜல்லிக்கட்டு குறித்த படம் என்பதால் பெரும் வரவேற்பு இருக்கும் நிலையில் நயன்தாராவின் 'அறம்' படத்திற்கு இதனால் பின்னடைவி ஏற்படுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்