அவர்கள் பிரிவிற்கு நான் காரணமில்லை : பதறும் ஸ்ருதி ஹாசன்

அவர்கள் பிரிவிற்கு நான் காரணமில்லை : பதறும் ஸ்ருதி ஹாசன்

நடிகர் கமல்ஹாசன் உடனான 13 வருட வாழ்க்கை முடிவுக்கு வந்ததாக நடிகை கவுதமி சமீபத்தில் அறிவித்திருந்தார். தன்னுடைய மகளின் எதிர்காலம் கருது இந்த முடிவை எடுத்ததாகவும் அவர் கூறியிருந்தார். இந்நிலையில், இந்த பிரிவுக்கு கமல்ஹாசனின் மகள்களான நடிகை ஸ்ருதி ஹாசன் மற்றும் அக்‌ஷரா ஆகியோர் காரணமாக இருக்கலாம் என ஒரு பக்கம் செய்திகள் பரவியது. ஆனால், ஸ்ருதி இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.
 
இது குறித்து, ஸ்ருதி ஹாசனின் செய்தி தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியது:
 
யாருடைய தனிப்பட்ட வாழ்க்கையை பற்றியும், அவர்களுடைய முடிவுகளை பற்றியும் ஸ்ருதி எந்த ஒரு கருத்தையும் தெரிவிக்கவில்லை....அவரை பொறுத்தவரை தன்னுடைய பெற்றோர், சகோதரி என தன்னுடைய குடும்பத்தின் மேல் அவர் வைத்திருக்கும் அன்பும், மரியாதையும் மட்டும் தான் பிரதானம் என்று கூறப்பட்டுள்ளது.