மாலை நேர ஸ்நாக்ஸ் மசாலா மினி இட்லி...!

 மாலை நேர ஸ்நாக்ஸ் மசாலா மினி இட்லி...!

தேவையான பொருட்கள்
மினி இட்லி - 6 (ஆறவைத்து)
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 1
மிளகாய் தூள் - 3/4 தேக்கரண்டி
மல்லித்தூள் - 1 தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது - 1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
எண்ணெய் - 1 தேக்கரண்டி
கடுகு - 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கொத்து
கரம் மசாலா தூள் - 1/2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி தழை - தேவையான அளவு

மசாலா மினி இட்லி

செய்முறை :

தக்காளி, வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

ஒரு வாணலியில் எண்ணெய் சேர்த்து சூடானதும் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் நன்கு வதங்கியவுடன், இஞ்சி பூண்டு விழுது, உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள், மற்றும் கரம் மசாலா தூள், ஆகியவற்றை சேர்த்து கலக்கவும்.

அடுத்து அதனுடன் பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து குழைய வதக்கவும்.

அடுத்து அதனுடன் நறுக்கிய கொத்தமல்லியை சேர்த்து அடுப்பை மிதமான சூட்டில் வைக்கவும்.

இதில் 2 அல்லது 3 தேக்கரண்டி தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

பின்னர் ஆற வைத்த மினி இட்லிகளை அப்படியே கூட சேர்த்துக் கொள்ளலாம்.

இட்லி உடைந்துவிடாமல் மென்மையாக கிளறவும் 3 நிமிடங்களுக்கு பிறகு அடுப்பை அணைத்து விடவும்.

சுவையான மசாலா மினி இட்லி தயார்.