மாலை நேர ஸ்நாக்ஸ் ராஜ்மா கட்லெட்...!

மாலை நேர ஸ்நாக்ஸ் ராஜ்மா கட்லெட்...!

தேவையான பொருட்கள் :

ராஜ்மா - 2 கப்
மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்,
கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன்,
ஓமம் - ஒரு டீஸ்பூன்,
வெங்காயம் - 1
இஞ்சி-பூண்டு விழுது - 2 டீஸ்பூன்,
வதக்கிய பெரிய வெள்ளை வெங்காயம் - அரை கப்,
எலுமிச்சைச் சாறு - 2 டீஸ்பூன்,
பொடித்த முந்திரி - அரை கப்,
வெள்ளை மிளகுத்தூள் - 2 டீஸ்பூன்
புதினா - சிறிதளவு
பிரெட் கிரம்ப்ஸ் - ஒரு கப்
எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு,

ராஜ்மா கட்லெட்

செய்முறை :

வெங்காயம், புதினாவை பொடியாக நறுக்கிகொள்ளவும்.

ராஜ்மாவை 10-12 மணி நேரம் ஊற வைத்து எடுத்து வேக வைத்துக் கொள்ளவும். 

வேகவைத்த ராஜ்மாவுடன் உப்பு, மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், ஓமம், இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் விழுதாக மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். 

அரைத்த விழுதுடன் வெங்காயம், பொடித்த முந்திரி, வெள்ளை மிளகுத்தூள், எலுமிச்சைச் சாறு, புதினாவைச் சேர்த்துக் கலந்து பிசைந்து, விருப்பமான வடிவில் தட்டி வைக்கவும். 

இதை பிரெட் கிரம்ப்ஸில் புரட்டி எடுத்து வைக்கவும்.

கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் செய்து வைத்த கட்லெட்டுகளை போட்டு பொரித்து எடுக்கவும். 

சூப்பரான ராஜ்மா கட்லெட் ரெடி.