சுவையான ஸ்நாக்ஸ் மீன் பக்கோடா செய்யலாம் வாங்க...!

சுவையான ஸ்நாக்ஸ் மீன் பக்கோடா செய்யலாம் வாங்க...!


தேவையான பொருட்கள் :

முள் நீக்கிய மீன் துண்டுகள் - அரை கிலோ
முட்டை - 3
சோளமாவு - 1 டேபிள்ஸ்பூன்
மிளகாய் தூள் - சிறிதளவு
மஞ்சள் தூள் - சிறிதளவு
உப்பு, எண்ணெய் - தேவைக்கு

செய்முறை :

மீனை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.

இட்லி தட்டில் கழுவிய மீன் துண்டுகளை வைத்து வேகவைத்துக்கொள்ளவும். 

பின்னர் அதனை சுமாரான அளவுகளில் உதிர்க்கவும். 

ஒரு பாத்திரத்தில் முட்டைகளை உடைத்து ஊற்றி நன்றாக அடித்து கலக்கி அதனுடன் சோளமாவு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் உப்பு ஆகியவற்றை சேர்க்கவும். 

இந்த கலவையில் உதிர்த்த மீனை கொட்டி அரை மணி நேரம் ஊற வைத்துவிட்டு எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும். 

ருசியான மீன் பக்கோடா ரெடி.C