சூப்பரான காலா ஜாமூன்...!

சூப்பரான காலா ஜாமூன்...!

தேவையான பொருட்கள் :

இனிப்பில்லாத கோவா -  1/4 கிலோ, 
சர்க்கரை - 750 கிராம், 
மைதா - 60 கிராம், 
ஆப்ப சோடா - 1 சிட்டிகை, 
ஏலக்காய் தூள் - 1/2  டேபிள் ஸ்பூன், 
ஜாதிக்காய் தூள் - 1/2  டேபிள் ஸ்பூன்.

செய்முறை :
 
சர்க்கரையில் 600 மி.லி தண்ணீர் ஊற்றி 5 நிமிடம் ஜீரா காய்த்து வைக்கவும். 1/2 மணி நேரம் ஜீரா (பாகை) ஆற வைக்க  வேண்டும். 

ஒரு பாத்திரத்தில் பால்கோவா, சோடா, மைதாவை ஒன்றாக சேர்த்து நன்றாக கலந்து கொஞ்சம் நீர் சேர்த்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும். 

5 நிமிடம் கழித்து, சிறு சிறு உருண்டைகளாகச் செய்து வைக்கவும்.

கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் செய்து வைத்த உருண்டைகளை போட்டு பொன்னிறத்தில் வறுக்க வேண்டும். 

வறுத்த உருண்டைகளை சூடாக இருக்கும் ஜீராவில் சேர்த்து ஊறவைக்க வேண்டும்.

சூப்பரான காலா ஜாமூன் ரெடி.