சத்தான வேர்க்கடலை பக்கோடா செய்வது எப்படி...?

சத்தான வேர்க்கடலை பக்கோடா செய்வது எப்படி...?

தேவையான பொருட்கள் : 

காய்ந்த, வறுக்காத வேர்க்கடலை - 200 கிராம், 
கடலை மாவு - 100 கிராம், 
அரிசி மாவு - 50 கிராம், 
[பாட்டி மசாலா] மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், 
[பாட்டி மசாலா] மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்,  
பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், 
கறிவேப்பிலை - சிறிதளவு, 
வெண்ணெய் - ஒரு டீஸ்பூன், 
உப்பு - தேவையான அளவு, 
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு.

செய்முறை : 

வேர்க்கடலையுடன் வெண்ணெய், கடலை மாவு, அரிசி மாவு, உப்பு, பெருங்காயத்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், கறிவேப்பிலை சேர்த்து நன்றாகப் பிசிறி, தண்ணீர் சேர்த்து கெட்டியாகக் பிசைந்து கொள்ளவும்.

கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கலவையில் சிறிது எடுத்து உதிர்த்தாற் போல் போட்டு, பொரித்து எடுக்கவும்.

சூப்பரான வேர்க்கடலை பக்கோடா ரெடி.