சத்தான தினை மாவு அடை

சத்தான தினை மாவு அடை

டயட்டில் இருப்பவர்கள், சர்க்கரை நோயாளிகள் தினமும் உணவில் சிறுதானியங்களை சேர்த்து கொள்வது நல்லது. இன்று தினை மாவு அடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

தினை மாவு - ஒரு கப், 
கடலைப்பருப்பு, உளுந்து - தலா கால் கப், 
கடுகு - சிறிதளவு,
வெங்காயம் - 2, 
பச்சை மிளகாய் - 4, 
கறிவேப்பிலை - சிறிதளவு, 
கொத்தமல்லி - சிறிதளவு, 
தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், 
எண்ணெய், உப்பு - தேவையான அளவு

செய்முறை : 

* வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* கடலைப்பருப்பு, உளுந்து இரண்டையும் தனித்தனியாக 2 மணிநேரம் ஊற வைக்கவும். 

* ஊற வைத்த பருப்பை கழுவி, மிக்சியில் போட்டு நன்கு அரைத்து கொள்ளவும்.

* அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் தினை மாவை சேர்த்து அடை மாவு பதத்தில் கலந்து கொள்ளவும். 

* கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலை போட்டு தாளித்து, அதை அடை மாவில் கொட்டிக் நன்றாக கலக்கவும். 

* அடுத்து அதில் தேங்காய் துருவல். உப்பு சேர்த்துக் கலந்து கொள்ளவும். 

* தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் மாவை அடைகளாக வார்த்து இருபுறமும் சிறிதளவு எண்ணெய் விட்டு சுட்டு எடுக்கவும்.
 


Loading...