இனிமே கருவேப்பிலையை தூக்கி போடாதீங்க!! எப்படி புற்று நோயை தடுக்கிறது என தெரியுமா?

இனிமே கருவேப்பிலையை தூக்கி போடாதீங்க!! எப்படி புற்று நோயை தடுக்கிறது என தெரியுமா?

கருவேப்பிலையை உணவிலிருந்து நாம் ஒதுக்கு விடுவதையே வழக்கமாக வைத்துக் கொள்கிறோம். ஆனால் அதுதான் மாணிக்கமாய் ஒளிரும் பண்புகளை கொண்டது. அது புற்று நோயை தடுக்கிறது. 

கறிவேப்பிலையில் கோயினிஜாக், குளுகோசைட், ஒலியோரெசின், ஆஸ்பர்ஜான் சொரின், ஆஸ்பார்டிக் அமிலம், அயாமைன், புரோலைன் போன்ற அமினோ அமிலங்கள் உள்ளது. இவைகள் தான் கறிவேப்பிலைக்கு இனிய மணத்தை தருகிறது. பல மருத்துவ குணங்களையும் வெளிப்படுத்துகிறது. 

கருவேப்பிலை மிகச் சாதரணமாகவே வளரும் தன்மை கொண்டது. அதன் மணம் போல் அதன் மருத்துவ குணங்களும் வியக்கத்தக்கது என பல அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். அதனைப் பற்றி காண்போம்.

ஆராய்ச்சி : கறிவேப்பிலை புற்றுநோயை ஆரம்பித்திலேயே கொல்லும் ஆற்றல் உடையது என்பதை அண்மையில் ஆஸ்திரேலிய உணவியல் அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர். இந்நிறுவன தலைமை ஆராய்ச்சியாளர் லனேகோபியாக் கறிவேப்பிலை சிறந்த ஆண்டி ஆக்ஸிடென்டாக இயங்குகிறது என்கிறார். இது புற்றுநோய், இதய நோய்களை குறைக்கும் ஆற்றல் கொண்டது. மேலும் கறிவேப்பிலையால் ஞாபக சக்தி எளிதில் கிடைக்கிறது என்கிறார் இவர். கறிவேப்பிலையிலிருந்து எண்ணை எடுத்து அதை நுரையீரல், இருதயம், கண்நோய்களுக்கு தலைக்கு தேய்க்கும் எண்ணையாக பயன்படுத்தலாம் என இங்கிலாந்தில் உள்ள வேளாண் மருத்துவ ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.

கண்பார்வை அதிகரிக்கும் : சாதாரணமாக 100 கிராம் கறிவேப்பிலையை அரைத்து சாற்றை எடுத்து 100 கிராம் தேங்காய் எண்ணையில் கலந்து இதமான சூட்டில் ஈரப்பதம் நீங்கும் வரை காய்ச்சி தினசரி தலைக்கு தேய்த்து வந்தால் உடல் உஷ்ணம் மங்கும். பரம்பரை நரை வராது. கண்பார்வை குறைவு ஏற்படாது. 

இதயம் : கறிவேப்பிலைபொடி செய்து அல்லது கருவேப்பிலையால் குழம்பு செய்து அடிக்கடி சாப்பிட்டால் நுரையீரல், இருதய சம்பந்தப்பட்ட ரத்த சம்பந்தப்பட்ட நோய்கள் வருவது குறையும் என்கிறது அந்த ஆராய்ச்சி நிறுவனம்.

கொழுப்பு கரைய: கறிவேப்பிலை ரத்தத்தில் இருக்கும் கொழுப்பை குறைக்கவும், அறிவை பெருக்கவும் உதவுகிறது. கறிவேப்பிலையை பச்சையாகவே மென்று தின்றால் குரல் இனிமையாகும். சளியும் குறையும் என்கிறார்கள் மருத்துவர்கள்.