வாரக்கணக்கில் தூங்கும் வினோத நோய் தாக்கிய கஜகஸ்தான் கிராமம்..

வாரக்கணக்கில் தூங்கும் வினோத நோய் தாக்கிய கஜகஸ்தான் கிராமம்..

கஜகஸ்தான் : கஜகஸ்தானில் உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வந்த சிலருக்கு, கட்டுப்படுத்த முடியாத அளவில் தூங்கும் வினோத நோய் ஒன்று தாக்கியுள்ளது. கஜகஸ்தான் நாட்டின் கலச்சி என்ற கிராமத்தில் கடந்த மார்ச் 2013 முதல் இந்த வினோதம் தொடர்ந்து வருகிறது. இங்கு வசிப்பவர் குழந்தைகள் முதல் பெரியவர் வரை  தங்களுக்கே தெரியாமல் திடீரென தூங்க தொடங்கி விடுகின்றனர்.

அவ்வாறு தூங்குபவர்கள் சில சமயங்களில் 2 நாட்கள் முதல் 1 வாரம் வரை தூங்குகின்றனர். மேலும், இவ்வாறு நீண்ட நேரம் தூங்கி எழும் அவர்களுக்கு ஞாபக மறதி நோயும் ஏற்பட்டுள்ளது. இதுவரை 152 பேருக்கு இந்த நோய் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த வினோத நிகழ்வுகளின் காரணங்களை கண்டறிய அறிவியலாளர்கள் பல சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.