நூடுல்ஸ், தின்பண்டங்களில் ஆபத்தான உப்பு-கொழுப்பு: ஆய்வில் அதிர்ச்சி தகவல்

நூடுல்ஸ், தின்பண்டங்களில் ஆபத்தான உப்பு-கொழுப்பு: ஆய்வில் அதிர்ச்சி தகவல்

இந்திய அறிவியல் மையத்தின் சுற்றுச்சூழல் கண்காணிப்பு ஆய்வகம் பல்வேறு உணவுகளின் மாதிரியை சேகரித்து ஆய்வுகளை நடத்தி உள்ளது.அதாவது பாக்கெட் தின்பண்டங்கள், நூடுல்ஸ், சூப் பவுடர்கள், பர்கர், பிரைடு சிக்கன், பீட்சா, சாண்ட்விச், வேப்பர் பிஸ்கட் மற்றும் பல்வேறு துரித உணவுகளை ஆய்வுக்கு எடுத்தார்கள். இதன்படி பிரபலமான நிறுவனங்களின் 14 சிப்ஸ்-நூடுல்ஸ் வகைகள், 19 பர்கர்-பீட்சா உள்ளிட்ட பொருட்கள் என மொத்தம் 33 தின்பண்டங்களை ஆய்வு செய்தனர்.

அதில் உப்பு, கொழுப்பு, கார்போ ஹைட்ரேட் எந்த அளவிற்கு சேர்க்கப்பட்டுள்ளன என்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.இதுபோன்ற பொருட்களில் சேர்க்கப்படும் ரசாயனம், உப்பு மற்ற வகை பொருட்கள் எந்த அளவிற்கு இருக்க வேண்டும் என்று இந்திய உணவு கட்டுப்பாடு தர ஆணையம் (எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ.) விதிகளை வகுத்துள்ளது.

இதை மீறி அதிக அளவில் இந்த பொருட்கள் சேர்க்கப்பட்டிருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. அதாவது ஆபத்தான அளவிற்கு உப்பு மற்றும் கொழுப்பு ஆகியவை அளவுக்கு அதிகமாக அதில் சேர்க்கப்பட்டிருந்தது தெரியவந்தது.இதுபோன்ற உணவுகளை சாப்பிடுவது உடல் உள் உறுப்புகளை பல்வேறு வகையில் பாதிக்கும் என்று அந்த அமைப்பு கூறியுள்ளது.எனவே இது சம்பந்தமாக உரிய நடவடிக்கைகளை இந்திய உணவு பாதுகாப்பு ஆணையம் எடுக்க வேண்டும் என்று சிபாரிசு செய்துள்ளனர்.