கோடைக்கு குளிர்ச்சியான புதினா லெமன் ஜூஸ்...!

கோடைக்கு குளிர்ச்சியான புதினா லெமன் ஜூஸ்...!

தேவையான பொருட்கள் : 

புதினா இலைகள் - 5, 
எலுமிச்சைச் சாறு - 4 டீஸ்பூன், 
உப்பு - சிட்டிகை, 
தேன் - 5 டீஸ்பூன், 
இஞ்சி - சிறிய துண்டு.

செய்முறை: 

புதினா இலைகளை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும். 

இஞ்சியை தோல் சீவி கொள்ளவும்.

மிக்சியில் புதினா இலைகளுடன் இஞ்சி, உப்பு, தேன், தண்ணீர் சேர்த்து அரைத்து வடிகட்டவும். 

அதனுடன் எலுமிச்சைச் சாறு சேர்த்து கலந்து பருகவும். 

குளுகுளு புதினா லெமன் ஜூஸ் ரெடி.