செரிமான சக்தியை தூண்டும் புதினா டீ...!

செரிமான சக்தியை தூண்டும் புதினா டீ...!

தேவையான பொருட்கள் : 

புதினா இலை - 7, தேயிலை - ஒரு டீஸ்பூன், 
தேன் அல்லது பனங்கற்கண்டு - ஒரு டீஸ்பூன், 
பால் - கால் டம்ளர்.
 

செய்முறை : 

ஒரு டம்ளர் நீரில் புதினா இலை, தேயிலைச் சேர்த்துக் கொதிக்கவிட வேண்டும். 

பாதியாகச் சுண்டியதும் வடிகட்டி, தேன் அல்லது பனங்கற்கண்டு சேர்த்துப் பருகவும். 

விருப்பப்பட்டால் பால் சேர்க்கலாம். 

பால் சேர்க்காமல் குடிப்பது தான் நல்லது. தேன் அல்லது பனங்கற்கண்டுக்கு பதிலாக கருப்பட்டி சேர்த்தும் பருகலாம்.